சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி

2

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கஞ்சா வாசனை வருவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் ஆய்வு செய்த போது 3 அடி உயரத்திற்கு கஞ்சா வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கஞ்சா செடியை வேரோடு பிடிங்கி சென்றனர்.




இது குறித்து டாக்டர்கள், நோயாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரும் வளர்த்தார்களா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

Advertisement