10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

5

கிருஷ்ணகிரி: 234 தொகுதிகள் உள்ள நிலையில் 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல முடியுமா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இந்தியாவையே நாளை பிடித்து விடுவேன் என்றுகூட விஜய் சொல்லலாம். விஜய் சொல்லி கொண்டே இருக்கிறார். இது சினிமா அல்ல. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும். வேட்பாளர்கள் போட வேண்டும்.
போடக் கூடிய வேட்பாளர் விலை போகாமல் இருக்க வேண்டும்.


அவர்களுடைய பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். பூத் பொறுப்பாளர்கள் இல்லை. கட்டமைப்பு இல்லை. யார் வேட்பாளர் என்று அவர்கள் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. 234 தொகுதிகள் இருக்கிறது. வரிசையாக 10, 15 பேர் பெயரை விஜயால் சொல்ல சொல்லுங்கள் பார்க்கும். நான் குறை சொல்லவில்லை.


அவர் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும். நான் இல்லை என்று மறுக்கவில்லை. பாஜ என்பது மிகப்பெரிய கட்சி. 272 பார்லிமென்ட் எம்பிக்கள் இருக்கிறோம். 3 முறை முதல்வராக இருந்தவர், 3வது முறை பிரதமராக இருந்து மிகப்பெரிய சக்தியாக மோடியின் புகழும், பெருமையும், திறமையும் எங்கே இருக்கிறது. தமிழகத்தில் சினிமா நடிகராக இருக்கும் விஜய்க்கு எங்கே இருக்கிறது? கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement