சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கான மைனாரிட்டி ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யபட்டு லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அகதிகளாக விரட்டப்பட்டபோது மவுனம் காத்தீர் .
வங்கதேசத்தில் ஒரு இளைஞர் உயிருடன் எரிக்க பட்டார் , அதை பற்றி யாரும் இங்கு எதுவும் பேசுவது
இல்லை , இன்று கேரளாவில் கிறிஸ்தவர்கள் லவ் ஜிகாத் தொல்லை காரணமாக பிஜேபி ஆதரிக்க
துவங்கி விட்டனர் , விரைவில் தமிழ் நாட்டிலும் அந்த நிலை வரும் , சில ஆண்டுகளுக்கு முன்
இலங்கையில் புனித வெள்ளி அன்று சர்ச் இல் குண்டு வெடிக்க பட்டது அதற்கு கோவையில்
இருந்து உதவி உள்ளனர் இதில் எந்த சிறுபான்மை செய்வது சரி என்று திராவிட மாதிரி விளக்குவாரா ....
In Bangladesh ,minority
Hindus ஐ வெறித்தனமாக கொன்று குவிக்கிறார்கள்.
திமுக ஆட்சியில், சொந்த திராவிட உடன்பிறப்பே தற்கொலை செய்து கொள்கிறார்.
கண்டனம் தெரிவிக்க மனசு இல்லையோ? இந்துக்கள் ரத்தம் என்றால் தக்காளி சட்னியோ ,இந்த திமுக viz., கிமுக ஆட்சிக்கு.
சமூக நீதி என்பது யார் மீதான தாக்குதல் என்பதைவிட யாரையும் தாக்கக் கூடாது என்று சொல்வதே...
கதறல்
திமுக ஆட்சியால்தான் சிறுபான்மை பட்டியலின தாக்குதல்கள் அதிகமாகியிருக்கிறதாம் தலிவரே
WAKF சட்ட திருத்தத்தை குப்பை தொட்டியில் எறிவேன் என கூறிய ""தேஜஸ்வி & லாலு"" வை பீகார் மக்கள் குப்பைத்தொட்டியில் எறிந்தார்கள் .
சனாதனத்தை அழிப்பேன் என்று சொன்ன உதயநிதியையும் உன்னையும் தமிழக மக்கள் அரசியல் இடம் தெரியாதபடி அழித்துவிடுவார்கள் - வெகு விரைவில்
வங்காளதேச ஹிந்துக்களுக்கு பேசுவியா?
லண்டன், டமாஸ்கஸ், பிரஸ்ல்ஸ் போன்ற நகரங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் பலஸ்தீன ஆதரவு தீவிரவாதிகள் தீயிட்டு கொளுத்தியது பற்றி இவருக்கு ல் யாரும் எழுதி கொடுக்கவில்லை போல.
வாக்கு வங்கியாக மதங்களையும் ஜாதிகளையும் பயன் படுத்துவதால் ஏற்படும் நிலைமேலும்
-
பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை
-
17 ஆண்டுக்கு பின் வங்கதேசம் திரும்பினார் கலிதா ஜியா மகன்
-
மருத்துவமனையில் 8 மணி நேரம் காத்திருப்பு: கனடாவில் இந்திய வம்சாவளி இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
பஸ்கள் பராமரிப்பில் திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்துகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி