வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
கோவை: கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 உயர் ரக டிரோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் உயர் ரக டிரோன்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப்பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சட்டவிரோதமாக 272 உயர் ரக டிரோன்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.15 கோடி.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டிரோன்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (2)
Santhakumar Srinivasalu - ,
25 டிச,2025 - 14:36 Report Abuse
ஏதோ சதி வேலை செய்யத்தான் இத்தனை ட்ரோன்கள் வருகிறது! மிக தீவிர விசாரணை வேண்டும்! 0
0
Reply
அசோகன் - ,
25 டிச,2025 - 13:58 Report Abuse
எதுக்கு போதை பொருளை கடத்தல் செய்யத்தான் இந்த விடியல் கூட்டம் செய்திருக்கும் 0
0
Reply
மேலும்
-
17 ஆண்டுக்கு பின் வங்கதேசம் திரும்பினார் கலிதா ஜியா மகன்
-
மருத்துவமனையில் 8 மணி நேரம் காத்திருப்பு: கனடாவில் இந்திய வம்சாவளி இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
பஸ்கள் பராமரிப்பில் திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்துகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement