ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தின விழா
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் அசோக் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் கோமதி, நகராட்சி துணை கமிஷ னர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி கமிஷனர் சரவணன், கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி மற்றும் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்ரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நுகர்வோரின் கடமைகளும், உரிமைகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி தினமும் கடையில் வாங்கும் பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, விலை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும், பொருளுக்கான 'பில்' வாங்க வேண்டும் என கூறி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.
மேலும்
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி