மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 10 ஆண்டில் ரூ.300 லட்சம் கோடியாக உயரும்: இக்ரா ஆய்வறிக்கையில் தகவல்
இந்திய மியூச்சுவல் பண்டு துறையின் மொத்த சொத்து மதிப்பு, அடுத்த 10 ஆண்டுகளில் 300 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது. சர்வதேச அளவிலான அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பொருளாதார ரீதியாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு உள்ள மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதே, இத்துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் என, 'இக்ரா' தெரிவித்துள்ளது.
வளர்ச்சிக்கான காரணங்கள்
* இளம் தலைமுறையினர் வருகை அதிகரிப்பு
* சிறு நகரங்களில் உள்ள தனிநபர்கள் முதலீடு 27% உயர்வு
* சிறு முதலீட்டாளர்களில் 28 சதவீதம் பேர், தரகர் இன்றி நேரடியாக முதலீடு செய்வது
* மொபைல் ஆப் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக எளிமையாக முதலீடு செய்ய முடிவது.
கடன் பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் பண்டுகள்
சொத்து மதிப்பு ரூ.19 லட்சம் கோடி
ஆண்டு வளர்ச்சி 15%
எஸ்.ஐ.பி., முதலீடு
சொத்து மதிப்பு ரூ.16.53 லட்சம் கோடி
மாதாந்திர முதலீடு ரூ.29,500 கோடி (16% உயர்வு)
மொத்த மியூச்சுவல் பண்டு மதிப்பில் எஸ்.ஐ.பி., பங்களிப்பு 20%