எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

திண்டுக்கல்: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ன் 38 வது ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., சிலைக்கு அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ் மோகன், மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜன், முரளி, சேசு, முகமது இக்பால், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், இணை செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர்கள் ஜெயராமன், முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

எரியோட்டில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பில் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், நகர செயலாளர் அறிவாளி, அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் குணசேகரன், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் நீலமேகம் பங்கேற்றனர்.

கொடைக்கானல் : நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜாபர் சாதிக், முன்னாள் நகர் மன்ற தலைவர் கோவிந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பிச்சை கலந்து கொண்டனர். தொழில்நுட்ப துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

நிலக்கோட்டை : நிலக்கோட்டை தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் யாகப்பன், நல்லதம்பி தலைமை வகித்தனர். நகர செயலாளர்கள் தண்டபாணி, சேகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., உதயகுமார் வரவேற்றார் .

வத்தலக்குண்டு : மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் விராலிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர செயலாளர் பீர்முகமது ஏற்பாட்டில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement