ரேஷன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குழு

தேனி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ரேஷன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குழு அமைத்து அரசு முதன்மை செயலாளர் சத்யபிரதாசாகு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஊதிய உயர்வு குழு அமைக்கப்பட்டு, சங்கங்கள், பணியாளர்களிடம் ஆலோசித்து 2021 பிப்.,ல் ஊதியம் உயர்வு செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், ஊதிய உயர்வு குழு அமைக்காததால் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி' என தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் (டிச.23ல்) செய்தி வெளியானது.

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்பதிவாளர் டாக்டர் வீரப்பன் தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஊதிய உயர்வு தொடர்பாக ரேஷன் கடை பணியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்களின் கோரிக்கை பரிசீலித்து அறிக்கை தயாரிக்க அரசு முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement