டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900-க்கு கீழே போனால் இறக்கம் வரக்கூடும்

ஆரம்பத்தில் ஏற்றம் கண்ட நிப்டி, ஒரு மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 35 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் 3 ஏற்றத்துடனும்; 13 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
Latest Tamil News


இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.28 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.81 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.44 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்ஸ்மால் ஐடி அண்டு டெலிகாம்' குறியீடு 0.81 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.


வர்த்தகம் நடந்த 3,247 பங்குகளில் 1,358 ஏற்றத்துடனும்; 1,767 இறக்கத்துடனும்; 122 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக 'ஓவர் பாட்' ஆக மாறவிட்டாலும், ஏற்றம் காண்பதில் தயக்க நிலை உள்ளது. 25,900 - 26,000-த்தில் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடர 26,500-க்கு மேல் செல்லவேண்டும் என்பதற்கான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிறது.
Latest Tamil News

Advertisement