தி லயன் கிங் படத்தால் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் படுகொலை

நியூ ஜெர்ஸி: தி லயன் கிங் கார்ட்டூன் படத்திற்கு பின்னணி குரல் கொடுத்து மிகவும் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1990ம் ஆண்டுகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு மிகவும் விருப்பமான கார்ட்டூன் படங்களில் ஒன்று தி லயன் கிங். இந்த தொடரில், 2011 முதல் வெளியான படத்தில் இடம்பெற்ற இளம் நாலா என்ற கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து இமானி ஸ்மித்,25, பிரபலமானார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வந்த இவர், டிசம்பர் 21ம் தேதி தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார், இமானியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.




இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இமானியின் ஆண் நண்பர் ஜோர்டன் டி ஜேக்சன் என்பவரை கைது செய்துள்ளனர்.

Advertisement