17 ஆண்டுக்கு பின் வங்கதேசம் திரும்பினார் கலிதா ஜியா மகன்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத காங்கிரஸ் கட்சியின்செயல் தலைவரான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு திரும்பினார்.
வங்கதேசத்துக்கு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுக்குப் பின், இன்று( டிச.,25) வங்கதேசம் திரும்பினார். மனைவி ஜூபைதா ரஹ்மான், மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் லண்டனில் இருந்து வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டாக்கா வந்தடைந்தார்.
விமான நிலையத்தில், கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அந்நாட்டின் பல இடங்களில் இருந்து பேரணியாக வந்து விமான நிலையத்தில் குவிந்தனர். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் தாரிக் ரஹ்மான் அழைத்து செல்லப்பட்டார். சாலையின் இருபுறத்திலும் நின்று கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இவர் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆடு வந்து விட்டது. இந்த ஆடு தூக்கி வீசப்படும். அவமானப்படும் முன்பு யூனுஸ் கிளம்புவது அவருக்கு நல்லது. இனி வங்கதேசம் விளங்கினார் போலத் தான்.
யூனுஸின் அடுத்த பலி ஆடு இவராகத்தான் இருப்பார்.
உயிர் பயம் இல்லையா ????
திருமிகு தமிழருவி மணியன் அவர்களும் திரு வாசன் அவர்களும் தமிழக ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். தமிழக மக்கள் இவர்களை போன்றவர்களையும் அண்ணாமலை போன்றவர்களையும் தான் நம்பி தேர்ந்தெடுக்க வேண்டும். திமுக, அதிமுக, தவிக, பாமக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்ஸ், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளெல்லாம் விலக்கப்படவேண்டும்
பலியாடு ரெடி....
திரு மணியன் அவர்கள் சிறிது காலம்தான் திட்டக்குழு பொறுப்பில் இருந்தார்.மேலும்
-
கட்சிகளை உசுப்பேத்தும் உத்தேச தொகுதிகள் பங்கீடு பட்டியல்கள்: ஐ.டி., 'விங்'குகள் 'அட்ராசிட்டி'
-
தி.மு.க., இளைஞரணி பதவிகள் வ.செ.,க்கள் சிபாரிசு புறக்கணிப்பு: அதிருப்தியால் த.வெ.க.,வுடன் 'டீலிங்'
-
மாவட்ட செயலர்களுக்கு எதிரான போராட்டம் தி.மு.க., மீது த.வெ.க., தலைமை சந்தேகம்
-
'மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி': அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
-
இதே நாளில் அன்று
-
காணாமல் போகிறது ராவ் கட்சி?