உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை; 22 கி.மீ.,க்கு மலையை குடைந்து உருவாக்கியது சீனா
பீஜிங்: சீனாவில், 9,842 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங்கின் உய்குர் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 9,842 அடி உயரத்தில், உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு மற்றும் தெற்கு ஜின்ஜியாங் பகுதிகளை இணைக்கும் உரும்கி - யுலி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையின் நீளம் 22.13 கி.மீ., ஆகும்.
இதற்கு முன்பு, தியான்சென் மலைத் தொடரை கடக்க பல மணி நேரம் தேவைப்பட்ட நிலையில், இந்த சுரங்கப்பாதையின் வழியாக வெறும் 20 நிமிடங்களில் கடந்து விட முடியும்.
இது, சீனா முன்னெடுத்துள்ள 'பெல்ட் அண்டு ரோடு' எனப்படும், பல நாடுகளை சாலை வழியாக இணைக்கும் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
சீனாவை ஆள்வது வேதியியல் பொறியியல் பட்டம் பெற்ற தொலை நோக்கு பார்வை உள்ள தலைவர் அதோடு எண்பது சதவீதம் சீனா அமைச்சர் பதவியில் உள்ள அமைச்சர்கள் பொறியியல் பட்டம் பெற்ற நன்கு கல்வி அறிவு உள்ள அமைச்சர்கள்.
understood what you are indirectly saying!மேலும்
-
ரூ.2,434 கோடி கடன் மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்
-
நாலாபுறமும் சரக்கு ரயில் பயணம் வெங்காய விலை உயராமல் நடவடிக்கை
-
உ.பி.,யில் ஐ.டி., பூங்கா தைவானின் 'டீமா' திட்டம்
-
நாமக்கல்லில் 'சிப்காட்' தொழில் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்
-
ஜி.எஸ்.டி., ஆண்டு அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டிக்க கோரி பா.ஜ., மனு
-
சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு