பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்கள் மீது கொடூர அடக்குமுறை: மம்தா கண்டிப்பு
கோல்கட்டா: பாஜ ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கமொழி பேசும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறையை கண்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
பாஜ ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் வங்க மொழி பேசும் மக்கள் மீது ஏற்பட்டுள்ள கொடூரமான ஒடுக்குமுறை, துன்புறுத்தலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒடுக்கப்பட்ட, பயந்துபோன புலம்பெயர்ந்த வங்கமொழி பேசும் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்.
மேலும் அந்தக் குடும்பங்களுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்குவோம். மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் இறப்புகள் ஏற்பட்டால், பொருளாதார இழப்பீட்டை அளிக்க உறுதிபூண்டுள்ளோம்.
அண்மையில் பாஜ ஆளும் ஒடிசாவில் ஜாங்கிபூர் பகுதியைச் சேர்ந்த சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன. டிச.24ம் தேதி சம்பல்பூரில் ஜாங்கிபூரின்சுடியைச் சேர்ந்த ஒரு இளம் புலம்பெயர்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
முர்ஷிதாபாத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசாவிலிருந்து பயந்து வீடு திரும்புகின்றனர். இதயத்தை நொறுங்க செய்யும் இத்தகைய சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம், மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும் சென்றடையும்.
பாஜ ஆளும் மாநிலங்களில் நடந்த இச்சம்பவங்கள் அனைத்திலும், குற்றவாளிகளை கண்டிப்பதும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக நாங்கள் உறுதியளிப்பது இப்பவும் தொடர்கிறது. வங்க மொழியில் பேசுவது ஒரு குற்றமாக இருக்க முடியாது.
இறந்த ஜூவல் ராணா விஷயத்தில், மேலும் ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு போலீஸ் குழு விசாரணைக்காக ஒடிசா சென்றுள்ளது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பங்களாதேஷில் இந்து மக்களை கொல்வதை பற்றி கண்டனம் தெரிவிக்க வக்கில்லை,ஓட்டுக்காக வங்க மக்களின் உணர்ச்சியை தூண்டி மாநிலங்களுக்கிடையே பகையை தூண்டும் விதத்தில் பேச வெட்கமில்லை.மேலும்
-
ரூ.2,434 கோடி கடன் மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்
-
நாலாபுறமும் சரக்கு ரயில் பயணம் வெங்காய விலை உயராமல் நடவடிக்கை
-
உ.பி.,யில் ஐ.டி., பூங்கா தைவானின் 'டீமா' திட்டம்
-
நாமக்கல்லில் 'சிப்காட்' தொழில் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்
-
ஜி.எஸ்.டி., ஆண்டு அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டிக்க கோரி பா.ஜ., மனு
-
சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு