தாயகம் திரும்பிய ஆப்கானியர்களுக்கு ஜப்பான் ரூ.180 கோடி நிதியுதவி

காபூல்: பிற நாடுகளில் இருந்து தாயகம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக ரூ.180 கோடி வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.



அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானியர்கள், சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருகின்றனர். இந்தாண்டில் மட்டும் 23 லட்சம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இதுபோன்று நாடு திரும்பியவர்களுக்கு உதவுவதற்காக ரூ.180 கோடியை மனிதாபிமான நிதியாக வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.


ஜப்பானின் இந்த உதவிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா அகதிகள் நல ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், " ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் அகதிகளுக்கு உதவுவதற்காக ரூ.175 கோடி நிதியுதவி வழங்கிய ஜப்பானுக்கு நன்றி. இந்த நிதி அகதிகளின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய உதவியையும் வழங்க உதவும். ஆப்கன் மக்களுடனான ஜப்பானின் தொடர்ச்சியான உறவு மற்றும் ஒற்றுமையை நாங்கள் மதிக்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளது.


கடந்த 2021ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆப்கானிஸ்தானுக்கு ரூ.4900 கோடி நிதியுதவி ஜப்பான் வழங்கியிருப்பதாக ஜப்பானுக்கான ஆப்கன் தூதரகம் தெரிவித்துள்ளது

Advertisement