வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலுார் ஆகிய வட்டங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறுகையில்;
கடலுார் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்கான முகாம்கள் இன்று 28 ம் தேதியும், வரும் ஜன. 3 மற்றும் 4ம் தேதிகளில் 9 சட்டசபை தொகுதிகளில், 2590 வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட விண்ணப்பங்களை https://www.eci.gov.in/electors, https://voters.eci.gov.in/ ஆகிய இணையதளங்களில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு, வரும் பிப். 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு