விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

கடலுார்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அன்னதானம் வழங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ், துணைசெயலாளர்கள் சித்தநாதன், பாலமுருகன் ஒன்றிய செயலாளர்கள் கலாநிதி, குமரேசன் முன்னிலை வகித்தனர்.

கடலுார் மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வைத்தியநாதன், சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசந்திரன், அய்யனார், சுதாபசுபதி, துர்க்கைரவி, அய்யப்பன், சத்தியமூர்த்தி, ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அய்யனார் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement