பள்ளிப்பட்டில் தொடரும் சுகாதார பாதிப்பால் மக்கள்..அச்சம்:. கர்லம்பாக்கத்தில் இருவர் பலி; 13 பேருக்கு சிகிச்சை
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றிய கிராமத்தில் சுகாதார பாதிப்பால் இருவர் பலியாகினர். மருத்துவமனையில், 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி, ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சமீபத்தில், 50 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், கர்லம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை, 50. இவர், கட்டுமான வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
அதை தொடர்ந்து, நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த சுதா, 45, என்பவரும் வயிற்று போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மேலும், கர்லம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணம்மாள், 85, என்பவர் உட்பட 4 பேர் திருத்தணி அரசு மருத்துமனையிலும், 9 பேர் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையிலும் என, 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
கர்லம்பாக்கம் கிராமத்தில் வயிற்றுபோக்கால் தொடர்ந்து இருவர் இறந்துள்ள நிலையில், அடுத்தடுத்து பலரும் வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், நேற்று காலை 8:00 மணிக்கு, பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில்மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை.
கழிவுநீர் கலப்பு
கிராமத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர், குடிநீர் சப்ளை செய்யப்படும் இடத்தில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மெத்தனமாகய செயல்படும் ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் யுவராஜ், பள்ளிப்பட்டு தாசில்தார் பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ் உள்ளிட்டோர் வந்து பேச்சு நடத்தினர்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, மாலை 4:00 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. எட்டு மணி நேரம் நடந்த மறியலால், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுகாதார பணிகள்
கர்லம்பாக்கம் ஊராட்சியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு. மாற்று ஏற்பாடாக டிராக்டர்களில் கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அத்திமாஞ்சேரிபேட்டை வட்டார அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்கள், கர்லம்பாக்கம் கிராமத்தில் வீடுதோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் கூறியதாவது:
கர்லம்பாக்கம் காலனியில், குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்கு பின் தான், சுகாதார பாதிப்பிற்கான காரணம் தெரியவரும். குடிநீர் குழாய்களை தோண்டி எடு த்து, புதிதாக மாற்றி அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிப்பட்டு, ராதா நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 50 பே ர் கடந்த நவ., 17 ம் தேதி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, கோனேட்டம்பேட்டை, திருத்தணி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆர்.கே.பே ட்டை அடுத்த விடியங்காடு கிராமத்தில், கடந்த 16ம் தேதி குடிநீர் பாதிப்பால் ஐந்து பேர் அனுமதிக்கப் பட்டனர்.
தொடர்ந்து நேற்று இருவர் பலியான நிலையில், 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@block_Gblock_B@ கழிவுநீர் அகற்ற இடம் இல்லை
ஊராட்சிகளில் கழிவுநீர் அகற்ற முறையான கட்டமைப்பு இல்லை. நீர்வரத்து கால்வாய்கள், ஆறுகள், ஓடைகளில் தான் கழிவுநீர் கலந்து விடப்படுகிறது. மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்த தேதியும், அடுத்து சுத்தம் செய்ய வேண்டிய தேதியும் குறிப்பிடப்படுவது இல்லை. இதனால் தேங்கி நிற்கும் கழிவுநீர், அதே பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும், மண்ணில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்புகளிலும் எளிதாக கலந்து விடுகின்றன என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.block_Bblock_G
மேலும்
-
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
-
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
-
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
-
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
-
ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்