விளைபவை அனைத்தும் விவசாயிக்கே; பிரிட்டீஷ் சட்டத்தை மாற்ற சத்குரு வலியுறுத்தல்
ஓசூர்: ''ஒரு விவசாயி, தன் நிலத்தில் எதை வளர்த்தாலும் அது அவருக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். 8 அடிக்கு கீழே உள்ள மண், அரசாங்கத்திற்கு சொந்தம் என்ற ஆங்கிலேயேர் கால சட்டம் மாற்றப்பட வேண்டும்,'' என, மத்திய அரசை, சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.
ஈஷாவின், 'காவேரி கூக்குரல்' சார்பில், நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் என்ற தலைப்பில், ஒருமுறை நடவு, ஆயுள் முழுதும் வரவு என்ற பெயரில், மரம் விவசாயம் சார்ந்த கருத்தரங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று நடந்தது.
இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கிவாசுதேவ் பேசியதாவது:
தமிழகத்தில் காவிரி தாய் நடந்து வந்தால் தான் வளம். ஓடி வந்தால் வெள்ளம். காவிரி தாய் நடந்து வர வேண்டுமானால், கரைகளில் மரம், செடி, கொடிகள் இருக்க வேண்டும். சந்தனம், செம்மரம் வளர்க்க சில பிரச்னை உள்ளது. ஏற்றுமதி விதிகள் எல்லாம், 2017 முதல் தளர்த்தப்பட்டது.
இதனால், ஆறு ஆண்டுகளில், 1.50 கோடி செம்மரங்களை விவசாயிகள் நட்டுள்ளன
ர். காவேரி கூக்குரல் மூலமாக, 13 கோடி மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. காவிரி எல்லை, 83,000 சதுர கி.மீ., உள்ளது. அதில், 3ல் ஒரு பங்கு மரங்கள் இருக்க வேண்டும். இதில் மர விவசாயம் செய்யலாம்.
விவசா ய நிலங்களில் மரங்கள், விலங்குகள் இல்லாமல் மண்ணை பாதுகாப்பது சாத்தியமில்லை. ஆகையால், மரம் சார்ந்த விவசாயம் மிகவும் முக்கியமானது. மரம் என்பது விவசாயிகளுக்கான காப்பீடு. இதனால் அவர்களின் பொருளாதார அமைப் பு பாதுகாக்கப்படும்.
ஒரு விவசாயி, தன் நிலத்தில் எதை வளர்த்தாலும் அது அவருக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். 8 அடிக்கு கீழே உள்ள மண், அரசாங்கத்திற்கு சொந்தம் என்ற ஆங்கிலேயேர் கால சட்டம் மாற்றப்பட வேண்டும்.
நிலத்தில் தங்கம் கிடைத்தால் கூட அரசு வரி விதிக்கலாமே தவிர, அதை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு விவசாயி தன் நிலத்தில் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கும், விற்பனை செய்வதற்கும் எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது.
இதை அரசு கொள்கையாக மாற்ற வேண்டும். இதை , வேளாண் துறை அமைச்சர் முதல் அனைத்து தலைவர்களிடமும் கோரிக்கையாக வைக்கிறேன். நீங்கள் தான் கொள்கைகளை உருவாக்குபவர்கள். தயவு செய்து, இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மரம் சார்ந்த விவசாய கொள்கைகள் குறித்த பரிந்துரைகளை ஜக்கி வாசுதேவ் வழங்க, மத்திய வேளாண் துறை அமை ச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெற்றுக் கொண்டார்
தான் சம்பாரிக்கறத மத்தவங்களுக்கு கொடுத்துட்டோம்னோ அல்லது மத்தவங்க அவரு சம்பாதிச்சத பிடிங்கிட்டாங்கன்னோ அப்பாவியாகவே இருக்கிறார் போல.
இன்னும் அடிமை சட்டங்களை வைத்து இருப்பது ஆபத்து. மாற்றங்களை செய்ய வேண்டும். சத்குரு அவர்கள் சரியான வழிகாட்டுதல் செய்துள்ளார். அரசாங்கங்கள் அமல்படுத்த வேண்டும்.
உண்மையான நிலைப்பாடு வாழ்க இந்த சாமியார்
சம்பாரிக்கிறது சம்பாரிக்குறவனுக்கே ந்னு சொல்லுங்க குருஜி..மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு