பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் தொழிலாளர் விழிப்புணர்வு
கரூர்: வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே, பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு குறித்து, மாநில பொதுச்செயலர் சங்கர் பேசினார்.
அதில், மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்-டங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல-னளிக்கும் சட்டங்களாகும். புதிய சட்டங்கள் அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்கு-வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் 24 மணி நேரம் பணிபுரியலாம். ஆண்களை போல் பெண்களும் ஒரே மாதிரி பணிபுரியும் போது ஒரே மாதிரி சம்பளம் வழங்க வேண்டும்.
புதிய சட்டத்தின்படி, வேலைக்கு வீட்டில் புறப்ப-டுவதில் இருந்து வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வரை, எப்போது விபத்து நடந்தாலும் இழப்பீடு பெற முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கட்-டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தொழில்துறை உறவுகள் சட்டம், தொழில் பாது-காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை சட்டங்-களில், 12 திருத்தங்கள் கொண்ட வர மத்திய அர-சுக்கு பரிந்துரை செய்துள்ளோம் உள்பட
பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் நந்த-கோபால், மாவட்ட செயலர் கருப்பையா, ஒன்-றிய பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு