மாவட்டத்தில் 20 இடங்களில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு


கரூர்: கரூர் மாவட்டத்தில், 20 இடங்களில் நீர், நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்தது.


தமிழகத்தில் காப்பு காடுகள் மற்றும் வெளி-யிலும் ஏராளமான ஈரநிலங்கள் உள்ளன. இதில் தடுப்பணை, ஏரி, குளங்கள் அடங்கும். இவ்வகை நிலங்களில் பல்வேறு பறவை இனங்கள் தங்கி-யிருப்பதோடு, பருவ காலங்களில் இடம் பெயர்ந்து வருவதும் வழக்கமாக உள்ளது. அரிய மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களை கண்டறியப்படும் போது, அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்-கொள்வது அவசியமாகிறது.


இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட-மாக ஈர நில பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்-பட்டு, இரண்டாம் கட்டமாக நிலப்பரப்புகளில் கணக்கெடுப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டம் முழுவதும், 20 இடங்-களில் நீர், நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கரூர் வனச்சரகர் அறிவழகன் தலை-மையில், ஆசிரியர்கள் ஜெரால்டு, மனோகர் உள்-பட தன்னார்வ அமைப்பினர், வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


காப்பு காடுகளுக்கு வெளியே உள்ள மாயனுார், வாங்கல், வீரராக்கியம், பஞ்சப்பட்டி, சின்ன-சேங்கல், வெள்ளியனை உள்ளிட்ட, 20 ஈர நில பகு-திகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்-ளப்பட்டது. இதில், காவிரி ஆற்று பகுதியான மாயனுார், கட்டளை நீர்ப்பிடிப்பு பகுதியில் நடந்த கணக்கெடுப்பின் போது, நீர் காகம், நாரை, கொக்கு, சாம்பல் குருவி, சிறிய பருந்து, வெண்க-ழுத்து மீன்கொத்தி உள்பட 30 வகையான பறவை இனங்களும், 300-க்கும் மேற்பட்ட பறவைகளும்

அடையாளம் காண முடிந்ததாக வன அலுவ-லர்கள் தெரிவித்தனர்.

Advertisement