மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமகிரிப்பேட்டை: மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்., ஆத்துார் பிரதான சாலையில் மெட்டாலா அமைந்துள்ளது. இங்குள்ள கணவாய் ஆஞ்ச-நேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி விழா, சனிக்கிழமை, அமாவாசை, பவுர்-ணமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். முக்கியமாக புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
இந்நிலையில், மார்கழி மாத சனிக்கிழமையான, நேற்று, இக்கோவிலில் சுவாமிக்குச் சிறப்பு வழி-பாடு நடந்தது. முன்னதாக, அதிகாலை வேளையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது.
தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு