கோவை மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்
கோவை: கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
அவரது அறிக்கை: கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு. மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சி.சுப்பிரமணியம் யார்?
* 1910 பிப்ரவரி 15ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள செங்குட்டை ப்பாளையம் என்ற கிராமத்தில் சி.சுப்பிரமணியம் பிறந்தார்.
* நாட்டின் பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்காற்றிய சி.சுப்பிரமணியம், மத்திய நிதி அமைச்சர் ஆகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் வேளாண் துறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். மஹாராஷ்டிரா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். தமிழக சட்டமன்றத்திலும் பார்லியிலும் நீண்ட காலம் பணியாற்றியவர்.
* இவர் 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார்.
* பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதில் சி.சுப்பிரமணியம் ஆற்றிய பங்கிற்காக 1998ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
பாலத்தின்.பெயரை C S கவுண்டர்
பாலம் என்று வைத்து இருக்க வேண்டும் அல்லது
C சுப்ரமண்ய கவுண்டர் பாலம்.என்று வைத்து இருக்க வேண்டும்.
மக்கள் சிந்திக்க தெரியாத முட்டாள்கள் என்று நினைக்கிறார் போல... அந்த ஊர்ல முக பேரு எடுபடாது என்று தெரியும்....
எதிர்வரும் 2026 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் அது நியாயமானதாக இருக்கும்.
திமுகவுக்கு எத்தனை தொகுதி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்றவற்றை காங்கிரஸ் தலைமை முடிவு செய்வது தான் எதிர்கால தமிழகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.
ஒரு கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தான் அக்கட்சியின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும். திமுக 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட தனியாக போட்டியிட்டதில்லை. அதனால் திமுகவின் யோக்கியதை யாருக்கும் தெரியாது.
மேற்கூறிய காரணத்தால், ஒரு கூட்டணியைத் தலைமை தாங்கும் அளவுக்கு தார்மீக ரீதியாக திமுகவுக்கு ஒரு யோக்கியதையும் இல்லை.
2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை மின்சார எரியூட்டல் மூலம் நன்றாக தகனம் செய்தால் காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்டுவார்கள். அதுதான் சர்வ உத்தமமான செயல். அதை காங்கிரஸார் சர்வ சாதாரணமாக செய்ய வேண்டும்.
கலைஞர் கருணாநிதி பெயர் பெரியார் பெயர் எல்லாம் மறந்து போச்சா....
Have you gotten bored of using your father's name?
பெயர் வைத்தது சரி, அதற்காக நீங்கள் பீத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லைமேலும்
-
பாஜவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா: கேட்கிறார் சீமான்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
-
அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை; புடின் குற்றச்சாட்டு
-
அறுசுவை: நமக்கான 'ஸ்பெஷல்'