உ.பி.,யை விட தமிழகம் நிலைமை மோசம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங்கிரஸ்!
புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழக நிலைமை மோசமாகியுள்ளது. கடன் தொகை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நிருபர்களிடம் திமுக எம்பி கனிமொழி, "அதிமுக ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது; இப்போது, திமுக தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது" என்று கூறியிருந்தார்.
இதனை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில், பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம். 2010ம் ஆண்டில், உ.பி., தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பி.,யை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது.
வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இவர், ஏற்கனவே தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேச்சு நடத்தியவர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் இரு கட்சிகளும் உள்ளன. இத்தகைய நிலையில், நடிகர் விஜய்யுடன், அதுவும் ராகுலுக்கு நெருக்கமானதாக கருதப்படும் பிரவீன் பேச்சு நடத்தியது சர்ச்சையை கிளப்பியது.
இப்போது அதே பிரவீன் மீண்டும் திமுகவினரை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (16)
Chandru - ,இந்தியா
28 டிச,2025 - 21:13 Report Abuse
Keep it up.Praveen Ji. Let the attack get more fierce 0
0
Reply
Chandra - CHENNAI,இந்தியா
28 டிச,2025 - 20:14 Report Abuse
Go and Discuss with Rahul Gandhi, how to develop Congress in North Indian states. Dont try to sell your useless strategies in Tamilnadu. You were rejected seat in Tamilnadu and hence you are trying to confuse the alliance here. If DMK is not there, Congress is not at all a National Party against BJP. People like you have wiped away Congress from this State One way, that is good for Tamilnadu 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
28 டிச,2025 - 20:13 Report Abuse
சீண்டுகிறது என்று சொல்வது சரியல்ல. உண்மையை சொல்வது என்பது சீண்டுவதா? இதே விஸயத்தை அன்பு மணி சோல்லிண்டே இருக்காரெ. அதுவும் சீண்டும் கணக்கில் வருகிறதா? கன்னி முழி சொன்னதுதான் அஇஅதிமுக வை அதாவது எடப்பாடியை சீண்டுவதாகும். திமுக வுக்கு டெய்லி ஓர்க் எடப்பாடியை சீண்டுவதும் அவர் கிட்டேயிருந்து வாங்கி கட்டிக்குறதும் தான். 0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
28 டிச,2025 - 19:59 Report Abuse
உலகத்திலேயே திராவிடத்தின் ஆட்சிதான் தான் செய்யும் கனிமவள கொள்ளைகளை விசாரிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு செய்திருக்கின்றார்கள் .இதை அதனுடன் கூட்டாக இருக்கும் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும் .இல்லையென்றால் நீங்களும் கூட்டு களவாளிகளாக கருதப்படுவார்கள் . 0
0
Reply
சாமானியன் - ,
28 டிச,2025 - 19:51 Report Abuse
வரப்போகிற தமிழக அரசுக்கு அரசை நடத்துவதே சவாலாக இருக்கும். எல்லாத் துறையிலும் கோடிக்கணக்கில் வட்டி கட்டியது மட்டுமில்லாமல் திமுக அரசு கர்வமாக பேசுகிறது. சர்வ வல்லமையுள்ள மோடிஜியாலே கூட ஒன்றும் பண்ணமுடியலே. 0
0
Reply
Shankar Sarangan - ,இந்தியா
28 டிச,2025 - 19:26 Report Abuse
இதுல இருந்து என்ன புரியுதுன்னா... ஒன்னு ஆட்சியில பங்கு கொடு. இல்லாட்டி நாங்க விஜய் கட்சி பக்கம் போறோம். அதற்கான சமிஞ்சை தான் இதுபோன்ற காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கள். அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை. அது போல யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
28 டிச,2025 - 19:02 Report Abuse
இந்த பேச்சுக்கள் காங்கிரஸ்க்கு கண்டிப்பாக BACKFIRE ஆகும் , இத்தனை நாட்கள் தீயமூகவுடன்
கூடி கும்மி அடித்துவிட்டு இன்று விமரிசனம் செய்தால் எப்படி 0
0
Reply
Raja - chennai,இந்தியா
28 டிச,2025 - 18:59 Report Abuse
24 கோடி மக்கள் தொகை உள்ள உ.பி நம்மை விட குறைந்த கடனே வைத்துள்ளது, நம்ம திராவிட மாடல் உ.பி அரசு தமிழகத்தை முன்னோடி மாநிலமாக நம்மை இந்தியாவின் நம்பர் 1 கடன்கார மாநிலமாக உயர்த்தி தமிழர்களை பெருமைப்பட வைத்துள்ளது 0
0
Reply
R SRINIVASAN - CHENNAI,இந்தியா
28 டிச,2025 - 18:35 Report Abuse
யுபி க்கு பல லட்ச கோடி ரூபீஸ் மோடி அரசு கொடுக்கிறது. தமிழ் நாட்டுக்கு வெல்ல நிவாரண நிதி கூட கொடுப்பது இல்ல. 0
0
Reply
Modisha - ,இந்தியா
28 டிச,2025 - 18:22 Report Abuse
காங்கிரஸ் + தவேக வெற்றி கூட்டணி . 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
-
சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement