காங்கிரஸ் கட்டமைப்பை நிச்சயம் வலுப்படுத்த வேண்டும்; திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் ஆதரவு
புதுடில்லி: காங்கிரசின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று திக்விஜய் சிங் கருத்து சரியானது தான் என்று அக்கட்சியின் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் திக்விஜய் சிங், கட்சியின் கட்டமைப்பை கடுமையாக சாடினார். கட்சியின் அதிகாரம் விரிவடைய வேண்டும், கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பேசினார்.
அவரின் பேச்சு காங்கிரசுக்குள் எழுந்த கலகக்குரலாக எழுப்பப்பட, பின்னர் நிருபர்களிடம் பேசிய திக்விஜய் சிங், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்சை எதிர்த்தாலும் ஆர்எஸ்எஸ் கட்டமைப்பைதான் பாராட்டினேன், ஒரு அமைப்பின் வலிமையை பாராட்டியது தவறா என்று கூறினார்.
இந் நிலையில் திக்விஜய் சிங் கருத்து சரியானது தான் என்று அக்கட்சியின் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார். கட்சியின் 140வது நிறுவன தினம் இன்று தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். திக் விஜய் சிங் அருகில் அமர்ந்தபடி, எம்பி சசிதரூரும் நிகழ்வில் பங்கேற்றார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
எங்களுக்கு 140 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. அதில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். நம்மிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். கட்சி கட்டாயம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
திக்விஜய் சிங் எனது நண்பர். நாங்கள் இதுபற்றி உரையாடுவது இயற்கையான ஒன்றே. கட்சியில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அவர் (திக்விஜய் சிங்) அவருக்காக மட்டுமே பேச முடியும்.
இவ்வாற சசிதரூர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
28 டிச,2025 - 20:33 Report Abuse
இந்த இரண்டு பேருக்கும் கல்தா அறிக்கை விரைவில் வெளியிடப்படும். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
28 டிச,2025 - 18:53 Report Abuse
திருமா கூட ஆர் ஸ் ஸ் சை பாராட்டியிருக்கிறார். வழக்கம்போல் இந்த தகவலையும் ஸ்டாலினிடம் இருந்து மறைத்துவிட்டாரகள் ஒரு கும்பல் முட்டு கொடுக்கும் 0
0
Reply
SSC - ,
28 டிச,2025 - 17:57 Report Abuse
வெளிநாட்டில் தேச விரோதம் பேசுபவரை கட்சியிலிருந்து முதலில் நீக்க வழி பாருங்கள். 0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
28 டிச,2025 - 17:50 Report Abuse
கட்சியையும் உங்களையும் வளப்படுத்துவதை கொஞ்ச நாள் விட்டு விட்டு மக்கள் வாழ்க்கையை வளப்படுத்த முயற்சித்தால் கட்சி தானே வளரும் 0
0
Reply
Balasubramanian - ,
28 டிச,2025 - 17:02 Report Abuse
மூன்று பேர் விலகி நின்றால் நிச்சயம் காங்கிரஸ் வலுப்பெறும்! ஒரு தாயும் இரு மக்களும் 0
0
A viswanathan - ,
28 டிச,2025 - 17:18Report Abuse
பாலசுப்பிரமணியம் நீங்கள்
சொல்வது உண்மை. 0
0
முருகன் - ,
28 டிச,2025 - 23:09Report Abuse
அந்த தாயின் கணவர் பிள்ளைகளின் தந்தை பாட்டிக்கு நடந்தது தெரியுமா உனக்கு
காங்கிரஸை வழிநடத்த அவர்களை விட யார் இருக்கிறார்கள் 0
0
vivek - ,
29 டிச,2025 - 06:07Report Abuse
முருகா...அது அவர்கள் செய்த பாவங்களின் பலன் 0
0
Reply
மேலும்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
-
சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement