ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் விமானப்படை தளம் சேதம்: ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

3


நமது சிறப்பு நிருபர்

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.




இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான இஷார் தார் கூறியதாவது: ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது பாதுகாப்பு பணியின் ஈடுபட்ட வீரர்களை தாக்கினர். இந்தியா பாகிஸ்தானை நோக்கி ட்ரோன்களை ஏவியது. 36 மணி நேரத்தில் 80 ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டன.


80 ஆளில்லா விமானங்களில் 79 ஆளில்லா விமானங்களை நாங்கள் இடைமறித்து, தடுத்தோம். ஒரு ஆளில்லா விமானம் மட்டுமே ஒரு ராணுவ தளத்தை சேதப்படுத்தியது. மே 10ம் தேதி அதிகாலையில் நூர் கான் விமானப்படை தளத்தை தாக்கி இந்தியா தவறு செய்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஆப்பரேஷன் சிந்தூர் முடிவில் பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்கள் சேதம் அடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement