தவெக விஜய்க்கு ராஜபக்சே மகன் வாழ்த்து
கொழும்பு: நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் வாழ்த்து கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விஜய் ஒருவர். அவரது சினிமா பயணமும், வெள்ளித்திரையில் அவரது ஆற்றலும் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவை, மறக்க முடியாதவை.
சினிமா அத்தியாயத்தை முடித்துவிட்டு ஒரு புதிய பயணத்தில் அவர் அடியெடுத்து வைக்கும் போது, சினிமா நிச்சயமாக அவரது இருப்பை இழக்கும். அவருக்கு எப்போதும் வெற்றிதான், அதை தவிர வேறொன்றுமில்லை, எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததை பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தமது பதிவில் நமல் ராஜபக்சே கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (1)
SARAVANA GANESAN A - ,இந்தியா
28 டிச,2025 - 16:51 Report Abuse
அடுத்து கருணா , முத்தையா முரளீதரன் , இலங்கையின் தென் பகுதி அதாவது சிங்கள பேரினவாத ஆதரவு பெற்ற தமிழ் ஈழ எதிர்ப்பு சிந்தனை கொண்ட தமிழர்கள் நிறைய பேர் விஜய்க்கு வாழ்த்துக்கள் சொல்வார்கள் . இப்ப தெரியும் அவர் யார் என்று . 0
0
Reply
மேலும்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
-
சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement