டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 7 பேர் கைது
புதுடில்லி: விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த, ஏழு பேரை துவாரகாவில் போலீசார் கைது செய்தனர்.
டில்லி மாநகரப் போலீசின் தனிப்படையில் மாநகர் முழுதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். துவாரகாவில், போலீசார் நடத்திய சோதனையில், விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்த, ஏழு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின், வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு விசாரணை நடத்திய அதிகாரிகள், ஏழு பேரையும் நாடு கடத்த உத்தரவிட்டனர். நாடு கடத்தும் நடைமுறைகள் நிறைவடையும் வரை, ஏழு பேரையும் தடுப்பு மையத்தில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement