இந்த வாரம் எப்படி இருக்கும்?

நியுட்ரன்: எவனென்று நினைத்தாய், எதைக் கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழு ரூபம்………...

டவுனு: என்ன பாட்டு பலமா இருக்குது.

நியுட்ரன்: என்னை எப்படி கலாய்ச்சு சிரிப்பீங்க. போன செவ்வாய்க்கிழமை, மொத்தமா சந்தை என் கன்ட்ரோலில இருந்துச்சு பார்த்தீங்களா!

டவுனு: உங்க பராக்கிரமத்தை பாத்து பலவருஷம் ஆச்சா. அதனால கலாய்ச்சுட்டேன். மன்னிச்சுக்குங்க!

நியுட்ரன்: மறுபடியும் பல வருஷமாயிடுச்சுன்னு கலாய்க்கிறீங்க.

அப்பு: வெட்டிப்பேச்சு பேசாம, மேட்டருக்கு வாங்க. டவுனு, ஒரே நாளில் 206 பாயின்ட் ஏத்தீட்டாராம். அதனால சீரியஸா மட்டும் பேசுவாராமாம்.

டவுனு: அப்பென்ன, டவுனென்ன, நியுட்ரனென்ன. சந்தை எல்லாரையும் சமமாக்கிவிடும் பராக்கிரமம் கொண்டது.

அப்பு: வாஸ்தவமான பேச்சு.

நியுட்ரன்: இந்த வாரம் இண்டஸ்ட்ரியல் ப்ரொடக்ஷன், மேனுபேக்சரிங் ப்ரொடக்ஷன், எம்3 பணப்புழக்கம், ஹெச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., வங்கி கள் வழங்கிய கடன் மற்றும் அவற்றி ல் இருக்கும் வைப்புத்தொகை வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் இருக்கு. வீடுகள் விற்பனை, சிகாகோ பிஎம்ஐ, வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, எஸ் அண்டு பி குளோபல் மேனுபேக்சரிங் பிஎம்ஐ போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் இருக்கு.

டவுனு: நிப்டி வாராந்திர சப்போர்ட்: 25955/25868/25781. ரெசிஸ்டென்ஸ்: 26183/26324/26411.

அப்பு: பார்றா! வார்த்தையை எண்ணி பேச ஆரம்பிச்சுட்டார்.

நியுட்ரன்:. ஆண்டு கடைசி, புத்தாண்டு பிறப்பு என இரண்டிலும் சந்தை இருக்கிற வாரம் இது. எப்படி இருக்குமுன்னு எதிர்பார்க்குறீங்க?

அப்பு: 26,100-க்கு மேல் தொடர்ந்து 2-3 நாள் குளோசானாதான், ஏற்றம் தொடர வாய்ப்பிருக்கு.

டவுனு: அப்படியெல்லாம் இல்லை. இறக்க ஏற்றமா இருக்க வாய்ப்பிருக்கு.

அப்பு: ஆண்டு கடைசி,ஆரம்பம் என்பதெல்லாம் டிஜிட்டல் யுகத்துல கிடையாது. எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி இருக்கறதால, முதல்ல இறக்கமும் அப்புறம் ஏற்றமும் வரலாமுன்னு கணிக்கிறீங்களா?.

நியுட்ரன்: பெருசா செய்திகள் இருக்க வாய்ப்பில்லை. அதனால பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

டவுனு: என்ன ஒரு பணிவான பேச்சு. பொருளாதார தரவுகள் மாதிரி திட்டமிட்ட செய்திகள் வேணா பெரிசா இல்லாம இருக்கலாம். திடீர் செய்திகள்தானே சந்தையோட போக்கை தீர்மானிக்குது.

அப்பு: சந்தை உச்சத்துக்கு போனா எதுனால போச்சுன்னு பாருங்க. எப்ப, எப்படி இறங்குமுன்னு பார்க்காதீங்க.

டவுனு: இறங்கும் போதும் இந்த அறிவுரை பொருத்தமானதா இருக்கும்.

நியுட்ரன்: ஆண்டு கடைசியில சண்டை போடாதீங்க. சமாதானமா சந்தோஷமா இருங்க.

டவுனு: நாங்க சமாதானமா இருந்தா, சந்தை உங்க கன்ட்ரோலில் இருக்குன்னு பெருமைப்பட்டுக்கலாம் இல்லையா நியுட்ரன்?

அப்பு: ஷார்ப்பா பாயிண்டை பிடிச்சுட்டீங்க.

டவுனு: தங்கம், வெள்ளி, உலக சந்தை, உள்நாட்டு சந்தை என எல்லா அசெட் கிளாஸும் ஏறிக்கிட்டே இருக்கு. எதுக்கும் கவனமா வியாபாரம் பண்ணுங்க.

அப்பு: இதை நான் டவுனுகிட்டெயிருந்து எதிர்பார்க்கல.

நியுட்ரன்: யார் சொன்னா என்ன. கருத்தை மட்டும் கேட்ச் பணிக்குங்க.

அப்பு: வர்ற வாரம் வாலட்டைலா இருந்திடவும் வாய்ப்பிருக்கு. கவனம் தேவை.

நியுட்ரன்: நான் கிளம்பறேன். மைத்துனர் திருமலைக்கு போயிருந்தார். தேவஸ்தான டைரி மூன்று வாங்கிட்டு வந்து கொடுத்தார். உங்க ரெண்டு பேருக்கும் கொண்டு வந்தேன். புத்தாண்டு வாழ்த்துகள்.

நியுட்ரன் கிளம்ப, அப்பும் டவுனும் அவரவர் காரை கிளப்பினர்.

Advertisement