காந்தி சிலை மீது கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி

பெலகாவி: பெலகாவி நகரின் ஹிண்டல்கா சாலை கேம்ப் பகுதியில், உலோகத்தால் செய்யப்பட்ட காந்தி சிலை உள்ளது. நேற்று முன்தினம் இந்த சிலையின் தலைப்பகுதியில் யாரோ சிலர், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிவித்து விட்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த கேம்ப் போலீசார் தொப்பியை அகற்றினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் யாரென்பது குறித்து விசாரிக்கின்றனர். சிலை அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

இதனிடையே, காந்தி தலையின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி உள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காந்தியவாதிகளிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்செயலில் ஈடுபட்டோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement