ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ரஷ்ய அதிபர்!
புதுடில்லி: 2026ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு ஒரு சில தினங்களில் பிறக்க உள்ள நிலையில் கொண்டாட்டங்களும், வாழ்த்துகளும் பொழிய ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், அரசியலையும் கடந்து பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர ஆரம்பித்து உள்ளனர்.
அந்த வகையில், 2026 ஆங்கில புத்தாண்டின் முதல் வாழ்த்தை பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு;
விளாடிமிர் புடின், வெளிநாடுகளின் தலைவர்களுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் வரவிருக்கும் 2026 ஆங்கில புத்தாண்டுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடி தவிர ஜனாதிபதி திரவுபதி முர்மு, சீன அரசியல் தலைவர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கும் புடின் புத்தாண்டு வாழ்த்துகளை கூறி உள்ளார். மேலும், ஹங்கேரி, செர்பியா, ஸ்லோவேக்கியா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் புடின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பி உள்ளார்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்