ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்
கிருஷ்ணகிரி,: .தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு-வலர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று உண்ணா-விரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சென்னப்பன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், செய-லாளர் கோபால கண்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெகதாம்பிகா ஆகியோர் பேசினர். பொருளாளர் ஜேம்ஸ்குமார் நன்றி கூறினார்.
இதில், மாநில துணைத்தலைவர் இளங்குமரன் பேசியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தில், மகாத்மா காந்தி பெயரை நீக்கியதுடன், திட்டத்தின் பெயரையும் மாற்றி உள்ளனர். கிராம புற ஏழை, எளிய மக்களின் வறுமையை போக்கும் வகையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அறி-முகம் செய்யப்பட்டது.இத்திட்டம் கடந்த, 20 ஆண்டுகளாக கிராம புற மக்களின் வறுமை ஒழிப்பிலும், பட்டினி சாவு இல்லாத நிலையை மாற்றியதிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் இத்திட்டத்தை ஒழிக்க, பா.ஜ., அரசு முயற்சித்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தை, 125 நாட்களாக உயர்த்-துவதாக கூறும் மத்திய அரசு, அதற்கான நிதி, 40 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று சொல்கிறது. இதனால், நிதி இல்லாத மாநி-லங்கள், இந்த திட்டத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.