அறிவியல் துளிகள்
1. 10,000 பெண்களிடம் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காபி அருந்துபவர்களை விட தேநீர் அருந்துபவர் களுக்கு இடுப்பு எலும்பு தாது அடர்த்தி சற்றே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மிதமான அளவு காபி அருந்தினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எலும்புத் தேய்மானத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
2. இரவு நேரத்தில் செயற்கை ஒளி வெளிச்சத்தில் இருப்பது மூளைக்கு அழுத்தத்தை அளித்து, தமனிகளில் வீக்கத்தை உண்டாக்கி, இதயநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு. அதிகப்படியான இரவு நேர வெளிச்சம் நீண்டகால அடிப்படையில் இதய நலத்தைச் சிதைப்பதாகத் தெரிவிக்கிறது.
3. நீர்நிலைகளை மீட்கவும், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கவும் நீர்நாய் கட்டும் அணைகளைப் போன்ற செயற்கைக் கட்டுமானங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். வறட்சி, காட்டுத்தீ பரவல் ஆகியவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த 'மிமிக்ரி' தொழில்நுட்பம் மாற்றாக முன்வைக்கப்படுகிறது.
4. கொசுவின் மிக நுணுக்கமான உறிஞ்சுகுழல் அமைப்பை மாதிரியாகக் கொண்டு, அடுத்த தலைமுறை 3டி பிரின்டிங் முனைகளை பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் மின்னணுவியல் மற்றும் மருத்துவத் துறையில் மிகச்சிறிய அளவிலான பாகங்களை முன்னெப்போதும் இல்லாத துல்லியத்துடன் தயாரிக்க வழிவகுக்கும்.
5. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வகை ஸ்மார்ட் மோதிரங்கள் சந்தைக்கு வருகின்றன. இவை குரல் கட்டளைகள் மற்றும் சைகைகள் மூலம் இயங்கக்கூடியவை. ஸ்மார்ட் போன்களைத் தொடாமலேயே செயலிகளைக் கட்டுப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் இக்கருவி உதவும்.
மேலும்
-
டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது; ஒரு சவரன் ரூ.99,520!
-
இழந்த புலன்களை மீட்டெடுக்கும் 'நியூரோ-கீ!'
-
கூர்ந்து கவனித்தால் கண் சிமிட்டல் குறையும்!
-
கடல் மட்ட உயர்வுக்கு புதிய அச்சுறுத்தல்!
-
சிந்தனையாளர் முத்து