தண்டனை வழங்க பின்னணி பார்க்கக்கூடாது

திருத்தணியில் வடமாநில தொழிலாளியை, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் கத்தியால் வெட்டி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். கோவையில் மற்றொரு வட மாநில தொழிலாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது, தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் போலீசையே ஒருவர் கத்தியால் வெட்டப்போவதாக மிரட்டியுள்ளார். போலீசுக்கே இது தான் நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? குற்றச்சம்பவத்தில் தொடர்புடையோரின் பின்னணி குறித்து ஆராயாமல், கடும் தண்டனை வழங்க வேண்டும்.

- விஜயராகவன், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில பாரத வித்யார்த்தி பரிஷத்

Advertisement