கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
திருப்பூர்: திருப்பூரில், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை, கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில், மாநகர போலீசார் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, 7:00 மணிக்கு, அப்பகுதிக்கு வந்த நபர், மக்கள் மத்தியில் அநாகரிகமாக நடந்தார்.
பணியில் இருந்த தெற்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ் ஏட்டு ராமகிருஷ்ணன் என்பவர், அந்த நபரிடம் பேசாமல் செல்ல அறிவுறுத்தினார். உடனே, போலீஸ் ஏட்டுடன் தகராறில் ஈடுபட்ட அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, குத்த முயன்றார்.
உடனே, சாமர்த்தியமாக, அந்த நபரிடம் இருந்து விலகிய ஏட்டு, தான் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி, அதை சுழற்றி தடுத்தார். அங்கிருந்த மற்ற போலீசார் விரைந்து வந்து, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்த போது, சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த இளங்கோ, 45, என்பது தெரிந்தது.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: போலீசை தாக்க முயன்ற நபர், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர், கடந்த, 2020ம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.
போலீசை தாக்க முயன்ற நபர், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் திடிரென்று மனநலம் பாதிக்கப்பட்டாரா தேர்தல் வருமுன் இதுபோன்ற ஆசாமிகள் யாருமே கைது செய்யப்பட மாட்டார்கள் ஏனென்றால் தேர்தல் சமயத்தில் இது போன்றவர்கள் ரவுடி கூட்டமே அரசை காப்பற்ற தயார் நிலையில் உள்ளது அதற்குத்தான் இது வெள்ளோட்டம் இவனை விரைவில் பற்றிய வெளியே விட்டுவிடுவார்கள் பிறகு அவனைப்பற்றிய செய்தங்கி எதுமே இருக்காது
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றால் கிறிஸ்துவ மதம் மாறியவர் என்றும் அவரை காவல் துறை காப்பாற்றுகிறது என்றும் அர்த்தம்.
திராவிட மாடல் ஆட்சி படி போலீஸ்காரர் மீது தான் தவறு. கத்தியை எடுத்தவர் நல்லவர். போலீஸ் அரசு ஊழியர் என்பதால் மன்னிப்பு. இதுவே பெல்ட் சுழற்றி யவர் பாஜக காரராக இருந்திருந்தால் 100 போலீஸ் சுற்றி வளைத்து குண்டா பாய்ந்திருக்கும். பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் பறந்திருக்கும்.மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை