ஜெர்மனியில் சுவரில் துளையிட்டு வங்கியில் ரூ.314 கோடி கொள்ளை
பெர்லின்: ஹாலிவுட்டின் ஓஷன்ஸ் லெவன் பட பாணியில் ஜெர்மனியில் வங்கியில் இருந்து 314 கோடி ரூபாய்க்கு அதிகமான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் கெல்சென்கிர்ச்சன் நகரில், 'ஸ்பார்காஸ்ஸே' என்ற வங்கி செயல்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வங்கிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், வங்கியின் வாகன நிறுத்துமிட பகுதியில் இருந்து பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கும் நிலவறை பகுதி வரை சுவற்றில் கொள்ளையர்கள் துளையிட்டனர். உள்ளே புகுந்து, 3,000க்கும் மேற்பட்ட பெட்டகங்களை உடைத்து, 314 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கக்கட்டிகள், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவத்தில் தொழில்முறை கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
கன்னக்கோல் களவு பற்றி வெளிநாட்டுக்கும் தெரிந்திருக்கிறதே ஆனால் பட்ட பாட்டுக்கு கிடைத்தது ரொம்பக் குறைவுதான்
மலையறிக்கை தயாராகி வருகிறது. திராவிட மாடல் அரசில் ஜெர்மனியில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். காவல்துறையே உன் மனசாட்சி உறுத்தவில்லையா?
அட பைத்தியங்களா, இவ்வளவு மெனக்கெட்டு ரூபாய் 314 கோடியைத்தான் திருட முடிந்ததா? தமிழ்நாட்டுக்கு வந்து பாருங்கடா. வெள்ளையும், சொள்ளையுமா, தினமும் ஷூட்டிங்க் நடத்திக்கிட்டு மக்களின் வரிப்பணம் பலப் பல லட்சம் கோடிகளை சுலபமாக கொள்ளையடித்துக் விடுகிறார்கள்.
திராவிட மாடல் ல்லுல ஓட்டுக்கு 500 கொடுத்து லட்சக்கணக்கான கோடிகள ஆட்டைய போடுறாங்க என்னமோ தொளைய போடுறதாம் அப்புறம் கேவலம் முன்னூத்தி சொச்சத்த லவுட்டறதாம். 500 கொடுத்து பல லட்சம் கோடி
விடியல் ஆட்சியில் காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்று மலையார் அறிக்கை வரப்போகிறது.
என்ன செய்வது திராவிட மாடல் ஆட்சி அப்படி. அனைத்திலும் முன் மாதிரி முதல் மாநிலம் நமது ஸ்டாலின் அய்யா கூற்றுப்படி
அப்பத்துக்கு மதம் மாறிய கும்பலுக்கு இப்படித்தான் சிந்தனை தோன்றும்
இதற்கும் திமுகவை சம்பந்தப்படுத்தி கருத்து கிளம்பும்.
நீ எதுக்கெடுத்தாலும் பாஜகவை சம்பந்தப்படுத்தி போடுவதை போலத்தானே
கன்னக்கோல் திருடர்கள் என்று சிறு வயதில் கேள்வி பட்டு இருக்கேன். விஞ்ஞான ஓங்கோல் திருடர்கள் காலத்தில் கன்னக்கோல் திருடர்களா.மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை