வேலைக்கு போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் அலறல்
திருச்சி: அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பிரேக், லைட், டயர்கள் எதுவும் சரியில்லை என்பதால், வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், 1,050 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலைதுார பயணங்கள் செல்லும் இந்த பஸ்களில் தரமற்ற டயர்கள், அடிக்கடி பிரேக் பெயிலியர், போதிய வெளிச்சம் இல்லாத ஹெட்லைட், சரியான பராமரிப்பு இல்லாமை, தரமற்ற உதிரி பாகங்கள் ஆகிய பிரச்னைகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
அண்மையில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே விரைவு போக்குவரத்து கழக பஸ் விபத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்ததற்கு, அந்த பஸ்சின் டயர் சரியில்லாதது தான் காரணம் என கூறப்படுகிறது.
'ரீடிரேட் டயர்'
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 2,000 டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பஸ்களை பராமரிக்கும் பணி செய்யும் தொழில்நுட்ப பிரிவில், 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பிரிவில் ஆட்களை நியமித்து, 26 ஆண்டுகள் ஆகின்றன.
இதனால் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. டயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் ஒரிஜினல் டயர் தான் போட வேண்டும். ஆனால் தற்போது ரீடிரேட் செய்த டயர் பயன்படுத்தப்படுகிறது.
அதே போல, பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்காக பயன்படுத்தப்படும், 'ஸ்டாக் அட்ஜஸ்டர்' என்ற கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அந்த கருவியை கழுவியும், சுத்தம் செய்தும் பயன்படுத்துவதால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாகவே பிடிக்கும் அபாய நிலை உள்ளது.
'ரெடிமேட் ஹெட்லைட்'
மோசமான நிலையில் இருக்கும் டயரை கூட மாற்றாமல், டயர் வெடிக்கும் வரை பயன்படுத்த நிர்பந்திக்கின்றனர். இதனால் அதிகளவில் விபத்து ஏற்படுகிறது. இந்த பிரச்னை தான், ராமநத்தம் அருகே பஸ் விபத்துக்கு காரணம்.
முன்பெல்லாம் மாதம், ஒன்று அல்லது இரண்டு பஸ்கள், 'ப்ரேக் டவுன்' ஆகும். ஆனால் கடந்த மாதம் மட்டும், 190 பஸ்கள் ப்ரேக் டவுன் ஆகியுள்ளன.
பெரும்பாலான பஸ்களில் ஹெட் லைட்கள் வெளிச்சம் இல்லை. இதனால் அனைத்து டிரைவர் களும் தனியாக ரெடிமேட் ஹெட்லைட் ஒன்றை சொந்த செலவில் தயாரித்து வைத்துள்ளோம். நாங்கள் பணிக்கு செல்லும் போது பஸ்சில் பொருத்தி விட்டு, பணி முடியும் போது கழட்டி எடுத்துச் சென்று விடுவோம்.
பஸ்சில் நிரந்தரமாக உள்ள ஹெட்லைட் வெளிச்சத்தை மட்டும் நம்பி பணிக்கு சென்றால், டிரைவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இதுகுறித்து, துறை அமைச்சர் அல்லது அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆகையால், அரசு விரைவு பஸ்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, போக்குவரத்துத்துறை அமைச்சரும், முதல்வரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓட்டுநர் நடத்துநர் வேலைக்கு இரண்டு லட்சம், பழுதுபார்த்தல் வேலைக்கு நான்கு லட்சம் கொடுத்து வேலைக்கு சேரும்போது உயிர் பயம் எதுவும் தெரியவில்லையா? எரிவாயு உருளைக்கு கூட மூன்றாம் நபர் காப்பீடு உள்ளது ஆனால் இத்தனை மக்கள் பயணம் செய்யும் வண்டிக்கு காப்பீடு இல்லை விபத்து ஏற்பட்டு யார் இறந்தாலும் நீதிமன்றம் சென்றே இழப்பீடு பெறும் நிலை.... ஒரிஜினல் டயரை விட ரீடிரேட் செய்யப்பட்ட டயரே மைலேஜ் கிடைக்கும்... நிர்வாகம் செய்ய திறமையான ஆட்கள் இல்லை இலவச பயணத்தால் மொத்த துறையும் நாசம்.... சம்பளம் ஓய்வுதியம், உயிர் பாதுகாப்பு என அனைத்து கேள்விகுறி!
ஒன்றிய அரசு நிதி தரவில்லை, நிதி பற்றாக்குறை, எங்க அப்பாக்கு சிலை கூட வைக்க முடியாத சூழல், என்ன பண்றது ?
திராவிட மாடல்...
மனசாட்சியே இல்லாம இதுக்கும் முட்டு குடுக்க ஒரு கோஷ்டி வருமே எங்கயா நீங்கெல்லாம்.
வேலைக்கு போனால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. வேலைக்கு போகாவிட்டால் அரசு போக்குவரத்து கழகமே இருக்காது. நீங்கள் தனியார் கம்பெனிக்கு அனுப்ப படுவீர்கள். இது தான் திராவிட மாடல் இதற்கு உங்கள் கம்மிகள் முழு ஆதரவு உண்டு. பெட்டி வேறு தயாராக உள்ளது.மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை