தமிழகத்தில் போலீசுக்கும் பாதுகாப்பில்லை: பா.ஜ.,
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டம், வீரராகவ பெருமாள் கோவிலில் போலீசாரை, மது போதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக, தற்போது மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கை சீரழித்துள்ளது, முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம்.
போதையில் தள்ளாடவிட்டு, பேரழிவில் தமிழகத்தை நிறுத்திவிட்டு, போதையில்லா தமிழகம் என போலியாக மார்தட்டி கொள்ளும் தி.மு.க., அரசின் மமதைக்கு, மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
-
தென் ஆப்ரிக்காவில் 'சுன்னத்' சடங்கில் 41 இளைஞர்கள் பலி
-
வேலைக்கு போனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் அலறல்
-
ஜெர்மனி சுவரில் துளையிட்டு வங்கியில் ரூ.314 கோடி கொள்ளை
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்
-
வீட்டில் பணம் வைத்திருக்க கூடாதா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
Advertisement
Advertisement