காங்கிரசில் விருப்ப மனு ஜன., 15 வரை அவகாசம் நீடிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனுக்கள் பெறுவதற்கான அவகாசம், வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள், கடந்த 10ம் தேதியில் இருந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை, 4,000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 15ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்., தலைமை அறிவித்துள்ளது.

Advertisement