ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
கோவை: கவுண்டம்பாளையம் - மணியகாரன்பாளையத்தை இணைக்கும் நல்லாம்பாளையம் ரயில்வே சுரங்கபாதையின் ஒரு பகுதியில், வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மணியகாரன்பாளையம், கணபதியில் இருந்து கவுண்டம்பாளையம் செல்ல நல்லாம்பாளையம் ரயில்வே சுரங்கபாதை பயன்பட்டு வருகிறது. மழைகாலங்களில் இந்த ரயில்வே சுரங்கபாதையில் நீர் தேங்குவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் ரோட்டில், தற்போது மேம்பாலப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக காந்திபுரம், பூமார்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் பஸ்கள் கண்ணப்பன் நகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இப்பஸ்கள் இந்த ரயில்வே சுரங்கப்பாதைவழியாக செல்கின்றன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் உள்ள இரும்பு துாண் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பணிகள் நடப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பாலத்தின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பஸ்கள் மாற்றுப்பாதையில் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கலாசாரத்தை அழிக்கின்றனர்!
-
ஜப்பான் 6.0 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
-
ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்
-
யூரோவை கரன்சியாக ஏற்றது பல்கேரியா
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்தில் 40 பேர் பலி
-
அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்