புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு பயணம்
பொள்ளாச்சி: ஆங்கில புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் மக்கள் திரண்டனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில், ஏராளமான வெளியூர் மக்கள் தங்கிப்படித்தும், வேலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளார்கள்.
இந்நிலையில், 2026 ஆங்கில புத்தாண்டு கொண்டாட, பொள்ளாச்சி பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில், சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனால் பயணியர் பஸ் ஏறி செல்ல நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர். மேலும், பெரும்பாலான பயணியர் முண்டியடித்துக்கொண்டு தங்கள் உடைமைகளை பஸ்சின் சீட்டில் போட்டு இடம் பிடித்தனர். இதில், ஒரு சில பஸ்சில் அதிக அளவு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் மக்கள் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement