கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை
கம்பம்: கால்நடை பராமரிப்புதுறையில் 25 ஆண்டுகள் உதவி மருத்துவர்களாக பணி செய்தும், பதவி உயர்வு கிடைக்காத நிலை உள்ளது என புலம்புகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியில் சேரும் டாக்டர்களுக்கு 8 ஆண்டுகள் பணியாற்றினால், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றினாலும் பதவி உயர்வு கிடைப்பதில்லை. கடைசி வரை உதவி மருத்துவராகவே இருந்து பணியில் ஓய்வு பெறுகின்றனர்.
கால்நடை டாக்டர்கள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் கால்நடை உதவி மருத்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பதவி உயர்வு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு வழங்குவது போல வழங்க வேண்டும். இரண்டு தரப்பினருமே ஒரே மாதிரி கல்வி கற்று பட்டங்கள் பெற்றுள்ளோம். ஆனால் அவர்களுக்கு பதவி உயர்வு தரப்படுகிறது. நாங்கள் கடைசி வரை உதவி மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெறுகிறோம். எனவே கால்நடை உதவி மருத்துவர்கள் 8 ஆண்டுகள் பணியாற்றினால், பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.