அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

உடுமலை: குடியிருப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, சிவசக்தி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், பெரியகோட்டை ஊராட்சியில் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

குடியிருப்பில் குடிநீர் சரியான கால அளவுகளில் வழங்கப்படுவதில்லை. இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில், சரி வர தண்ணீர் நிரப்புவதில்லை. இதை சரி செய்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.

குடியிருப்பில் உள்ள அனைத்து வீதிகளிலும், ரோட்டு ஓரங்களில் செடிகள் முளைத்து முதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. இந்த செடிகளை களைக்கொல்லி வாயிலாகவோ அல்லது ஆட்களை வைத்தோ சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளிவாசல் வீதி கார்னரில் அமைந்துள்ள, உயர் கோபுர விளக்கு சரிவர எரிவதில்லை. மேலும் அனைத்து வீதிகளிலும் பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்தும், குறைந்த வெளிச் சத்துடன் எரிந்து கொண்டு இருக்கும் மற்ற விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

ஆறுமுககவுண்டர் லே அவுட் பகுதியில் ரோடு சீரமைக்க வேண்டும். காலியாக உள்ள சைட் குப்பை கூடாரமாக மாறி உள்ளது. இதை சுத்தப்படுத்த வேண்டும்.

தேவையற்ற இடங்களில் குப்பை கொட்டுவதால், ஊராட்சி வாயிலாக அறிவிப்பு செய்து குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement