நகராட்சி அறிவிப்பு
உடுமலை: உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு, பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகைகள், பாதாளச்சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் உரிம கட்டணம் ஆகிய வரி மற்றும் வரி இல்லா இனங்களை, நகராட்சி வரிவசூல் மையத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளுமாறும், நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறும் நகராட்சி கமிஷனர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement