வரதட்சணை புகாரில் கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

தேனி: தேனியில் திருமணத்திற்கு பின் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக மனைவி புகாரில் கணவர் உள்பட ஆறு பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தேனி பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெரு மிருதாஸ்ரீ 19. இவருக்கும் அதே பகுதியைசேர்ந்த சிவராமசந்திரன் என்பவருக்கு திருமணம் நடந்தது.

அப்போது வரதட்சணையாக 30 பவுன்நகை, பணம் ரூ. 2 லட்சம் பெண் வீட்டார் வழங்கி உள்ளனர். ராமச்சந்திரனின் பெற்றோர் மனோரஞ்சிதம், ஜெயராஜ், உறவினர்கள் சிவகனி, நடராஜ், பிச்சை ஆகியோர் கூடுதல் வரதட்சனை கேட்டு மிருதாஸ்ரீயை தொந்தரவு செய்தனராம். இரு வீட்டார் சேர்ந்து சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் உறவினர் நடராஜன் சிவராமசந்திரனை தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்ள 20 பவுன் நகை வாங்கினார். திருமண நிகழ்விற்காக சிவகனி 10 பவுன் பெற்று சென்றனர். மிருதாஸ்ரீ நகையை திருப்பி கேட்ட போது வீட்டிற்குள் பூட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

தகவல் அறிந்த மிருதாஸ்ரீ பெற்றோர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தேனி மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவில் கணவர் சிவராமசந்திரன், அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement