வேலைநிறுத்தம் தவிர்க்க அரசு பகீரத முயற்சி; அரசு ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர் நாளை(ஜன.,02) பேச்சு
சென்னை: ஜன.,6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் வேலு நாளை (ஜன.,02) பேச்சு நடத்த உள்ளார்.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்தன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த டிச., 22 ல் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ஜன.,6 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் நாளை ஜன.,2ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் வேலு பேச்சு நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு போட்டோ ஜியோ அமைப்புடனும், 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடனும் பேச்சு நடைபெற உள்ளது.
இந்த அரசு தங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100-கோடி சொத்து பணம் இருக்கும் அளவிற்கு அவர்களை ஊக்குவித்து விட்டது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் இதுதான் கடைசி ஆட்சி இதற்குப்பின் அவர்களுடைய ஆட்சி எப்போதுமே வாராது வாராது வாராது அதற்குள் கட்சி பிரமுகர்கள் அமைச்சர்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ எல்லையே இல்லாமல் சம்பாதிக்க அனுமதித்துவிட்டார்களாம்
அமைச்சருக்கு அந்த துறை பற்றி இன்னிக்கு இரவாவது ட்ரெய்னிங் கொடுத்து தயார்படுத்தி கூட்டிவாங்க. அப்பதான் தேர்தல் வாக்குறுதி போல எதையாவது சொல்லி தப்பிக்கலாம்.
பொய்மூட்டைய அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தாச்சு..இருந்தாலும் இந்த படிச்சவங்களையே நாலரை வருஷமா வாயிலே வடசுட்டே ஏமாத்தியிருக்காங்கனா திமுக திமுகதான்பா..
தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், பஸ் டயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் ஒரிஜினல் டயர் தான் போட வேண்டும். ஆனால் தற்போது ரீடிரேட் செய்த டயர் பயன்படுத்தப்படுகிறது...பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்காக பயன்படுத்தப்படும், ஸ்டாக் அட்ஜஸ்டர் என்ற கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அந்த கருவியை கழுவியும், சுத்தம் செய்தும் பயன்படுத்துவதால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாகவே பிடிக்கும் அபாய நிலை உள்ளதாம் ....இந்த பஸ்களில் ஏறிடாதீங்க ...பயணிகள் உயிருக்கு உத்தரவாதமில்லை .
தமிழக அரசு பஸ் ஊழியர்கள் நிலைமை ....தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், 1,050 பஸ்கள் இயக்கப்படுகின்றன...பஸ்களில் பிரேக், லைட், டயர்கள் எதுவும் சரியில்லை என்பதால், வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனராம் ....அண்மையில், ராமநத்தம் அருகே பஸ் விபத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்ததற்கு, அந்த பஸ்சின் டயர் சரியில்லாதது தான் காரணமாம் ....இப்படி ஒரு படு கேவலமான ஆட்சி நடக்குது ....
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களுக்கு செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழக குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும் என அன்புமணி சாடல்
மேலும்... திமுக அரசு ஒவ்வொரு தமிழக குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை வாங்கி வைத்திருப்பதாகவும் கண்டனம் .....மேலும்
-
கலாசாரத்தை அழிக்கின்றனர்!
-
ஜப்பான் 6.0 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
-
ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்
-
யூரோவை கரன்சியாக ஏற்றது பல்கேரியா
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்தில் 40 பேர் பலி
-
அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்