பிரதமர் மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி: '' ஒவ்வொரு முறையும் ஏழை மக்கள் இறக்கும்போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்திய பொது மக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூரில் குடிநீருக்கு மாறாக விஷமே விநியோகிக்கப்பட்டது. அதே சமயம் நிர்வாகம் கும்பகர்ணனைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது.
வீடுதோறும் துயரம் பரவியுள்ளது. ஏழைகள் நிர்கதியாக நிற்கின்றனர். இதற்கு எல்லாம் மேலாக பாஜ தலைவர்களிடம் இருந்து ஆணவமாக அறிக்கைகள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டன. அரசோ அதற்கு பதில் அகந்தையை வழங்கி உள்ளது.
அசுத்தமான துர்நற்றம் வீசும் தண்ணீரைப் பற்றி மீண்டும் மீண்டும் மக்கள் புகார் அளித்தனர். இருந்தும் ஏன் செவிசாய்க்கப்படவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்தது எப்படி?சரியான நேரத்தில் நீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்
இவை சும்மா கேட்கப்படும் கேள்விகள் இல்லை. இவை அனைத்தும் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பதற்கான கோரிக்கை. சுத்தமான நீர் என்பது சலுகை அல்ல. அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமை கொலை செய்யப்பட்டதற்கு பாஜவின் இரட்டை இன்ஜின் அரசும், அதன் அலட்சியமான நிர்வகம் மற்றும் அதன் இரக்கமற்ற தலைமை ஆகியவையே பொறுப்பு.
மபி மாநிலம் இப்போது மோசமான ஆட்சியின் மையமாக மாறியுள்ளது. ஓரிடத்தில் இருமல் மருந்து குடித்து ஏற்படும் மரணங்கள்.மற்றொரு இடத்தில் அரசு மருத்துவமனைகளில் எலிகளால் குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்படுவது. இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து ஏற்படும மரணங்கள். ஒவ்வொறு முறையும் ஏழை மக்கள் இறக்கும் போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
ராகுல் மக்களின் சாவில் அரசியல் செய்கிறார். ஒரு கடைமட்ட அரசு ஊழியர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த அரசு எப்படி பொறுப்பாகும்? தமிழகத்தில் நாலு இளைஞர்கள் போதை பொருள் சாப்பிட்டு ஒரு வடஇந்தியரை வெட்டியதற்கு ஸ்டாலினை குறை சொல்ல வேண்டியது தானே.
ஏண் எப்படி நீங்க இந்திரா காந்தி கொல்லப்பட்ட பொழுது சீக்கியர்களை தேடி தேடி கொன்றீர்களே
ஷாருக்கான் வங்க தேச வீரரை ஏலத்தில் எடுத்ததற்கு ராகுல் பதில் என்ன?
போபால் விஷவாயு தாக்குதல் நடந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? அதற்கு காரணமானவரை பத்திரமாக அவர் நாட்டுக்கு அனுப்பிவைத்தீர்கள். அதை எப்படி நீ மறந்தாய், ஞானத்தங்கமே...?
அயல் நாட்டு கைகூலிக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல மாட்டார்.
ஜெர்மனி மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட தனது இரண்டு முக்கிய வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமையை கண்டிப்பதற்காக ராகுல்காந்தி இந்தியா வந்திருப்பது உண்மையில் நாம் செய்த பாக்கியம்!
When Muzaffarnagar riots happened Rahul and Sonia Gandhi only visited Muslims and CM Akhilesh Yadav d aid only for Muslims. Hindu forgets everything so fast!
இவருக்கு குறை மட்டுமெ கண்ணுக்கு தெரியும்.... நாட்டின் நிறை எதுவுமே இவரது கண்ணுக்கு தெரியாது.....இதோ வந்துட்டாரு பிண அரசியல் செய்ய !!!
விஷவாயு தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தது இதே மத்திய பிரதேசத்தில்தான். அதன் முக்கிய குற்றவாளியை அரசு விமானத்தில் பாதுகாப்பாக அனுப்பி தப்பவைத்த சிறுமை உங்க அப்பாவின் சாதனை.
ராகுலின் கோமாளித்தனமான கேள்விகளுக்கு மோடி பதில் சொல்லாமல் இருப்பதே நல்லதுமேலும்
-
அ.தி.மு.க., 'மாஜி' த.வெ.க.,வில் ஐக்கியம்
-
சிறுவன் பலிக்கு அரசே காரணம் அ.தி.மு.க., புகார்
-
'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' சி.ஐ.டி., நிறுவனம் சாதனை
-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' முன்னாள் முதல்வர் பன்னீர் நம்பிக்கை
-
நடுத்தெருவில் நிற்க போகும் காங்.,: வேலுாரில் அண்ணாமலை சாபம்
-
'இசாப் ஸ்மால் பைனான்ஸ்' வங்கிக்கு புதிய தலைவர்