'தை பிறந்தால் வழி பிறக்கும்' முன்னாள் முதல்வர் பன்னீர் நம்பிக்கை
அவிநாசி: ''தை பிறந்தால் வழி பிறக்கும்,'' என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஒரு ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணை ப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் பங்கேற்றார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை மீண்டும் அக்கூட்டணிக்குள் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையே, பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை நடிகர் விஜயின் த.வெ.க., கூட்டணியில் சேர்க்கவும் பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அவிநாசி வந்த பன்னீர்செல்வத்திடம், 'வரும் சட்டசபை தேர்தலில், நீங்களும், தினகரனும் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவது உறுதியா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ''தை பிறந்தால் வழி பிறக்கும். நிச்சயம் தை மாதத்தில், நல்ல பதில் வரும்,'' என்றார்.
முதல்ல அமாவாசை, அப்புறம் பவுர்ணமி அப்புறம் ஆங்கில புத்தாண்டு, தமிஷ் புத்தாண்டு, மத்த திராவிட தேச புத்தாண்டுகள்- உகாதி, விஷு, குடி படுவா, அப்புறம் தை பூசம் இப்படியே பஞ்சாங்கம் பாத்து தேதியை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான்மேலும்
-
ஏக்நாத் ஷிண்டேவை வீழ்த்த கூட்டு சேர்ந்த பா.ஜ., - காங்.,: மஹாராஷ்டிராவில் அதிசயம்!
-
ஈரான் சிறைபிடித்த எண்ணெய் கப்பல் இந்தியர்கள் 10 பேரின் நிலை என்ன?
-
நாட்டின் ஜி.டி.பி.,யை தாங்கி பிடிக்கிறது வீடுகளில் 'மறைந்திருக்கும் மூலதனம்'
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?
-
ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்
-
கால் பார்வேடிங் வசதியில் புது மோசடி: எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்