'இசாப் ஸ்மால் பைனான்ஸ்' வங்கிக்கு புதிய தலைவர்

புதுடில்லி: கேரளாவின் திருச்சூரை தலைமையிடமாக கொண்ட, 'இசாப் ஸ்மால் பைனான்ஸ்' வங்கியின் தலைவராக கார்த்திகேயன் மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் தலைவராக இருந்த ரவி மோகன், கடந்த டிசம்பர் 20ம் தேதி ஓய்வு பெற்றார்.

வங்கி செயல்பாடுகள், இடர் மேலாண்மை, மனித வள மேம்பாடு, கடன் கண்காணிப்பு மற்றும் மீட்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் கார்த்திகேயன் மாணிக்கம் நிபுணத்துவம் பெற்றவர் என, வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவராக தன் பொறுப்பில், வங்கியின் இயக்குநர் குழுவுக்கு யுக்தி சார்ந்த வழிகாட்டுதல்களை அவர் வழங்குவார் என கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் பணி அனுபவம் பெறப்பட்டுள்ள இவர், இதற்கு முன்னதாக பொதுத்துறையை சேர்ந்த, 'பேங்க் ஆப் இந்தியா'வின் செயல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Advertisement