அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

9

வாஷிங்டன்: அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் பதில்



ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி கூறியதாவது:
ஈரான் எதிர்ப்புப் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement