ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக்கானுக்கு கிளம்பியது எதிர்ப்பு
புதுடில்லி: வங்கதேச கிரிக்கெட் வீரரை ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் எடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் அடித்துக் கொல்லப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 4 வாரங்களில் மட்டும் 3 பேர் கொல்லப்பட்டனர். மற்றொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் வங்கதேச முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கோல்கட்டா அணி ஏலத்தில் எடுத்தது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும் நிலையில், அந்நாட்டு வீரரை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுப்பதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் சஞ்சய் நிருபம் கூறியதாவது: நாட்டுமக்கள் வங்கதேசம் மீது கோபமாகவும், ஆத்திரமாகவும் இருக்கும்போது, அந்நாட்டை சேர்ந்தவர்களுடன் இந்தியாவில் யாராவது கோபம் வைத்து இருந்தால் அவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகக்கூடும். ஷாருக்கான் அணியில் ஒரு வங்கதேசத்தவர் இருந்தால், அவர் ஒரு பெரிய இலக்காக மாறுவதற்கு முன்பு அவரை அணியில் இருந்து ஷாருக்கான் நீக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது ஷாருக்கானுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த ஆனந்த் துபே கூறியதாவது: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாட அனுமதிக்கக்கூடாது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும். ஹிந்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை கொன்று பிரிவினையை அவர்கள் அறுவடை செய்கின்றனர். ரஹ்மானை உடனடியாக அணியில் இருந்து ஷாருக்கான் நீக்க வேண்டும். இல்லைஎன்றால், இந்திய மண்ணில் இருந்து கொண்டு, இங்கேயே பணம் சம்பாதித்தாலும், நாட்டின் உணர்வை புரிந்து கொள்ள மாட்டார் என கருத நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜ எம்பி சங்கித் சிங் சோம் கூறியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படும்விதம், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது, அவர்கள் வீடுகள் எரிக்கப்படுவது, இந்தியாவுக்கு எதிராக கோஷம் போடுவது போன்றவை நடக்கின்றன. ஷாருக்கானை துரோகி என அழைப்பேன். ஏனென்றால், அவரிடம் உள்ள அனைத்தும் இந்தியா கொடுத்தது . இந்திய மக்கள் கொடுத்தனர். ஆனால், அவர் பணத்தை எங்கு முதலீடு செய்கிறார். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாட்டின் வீரரிடம் முதலீடு செய்கிறார்.
ஷாருக்கான் போன்றவர்கள் வெற்றி பெற முடியாது. என்ன விலைகொடுத்தாலும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இந்தியாவில் விளையாட முடியாது. விமான நிலையத்தை தாண்டி அவரால் வர முடியாது. ஷாருக்கான் போன்றவர்கள் துரோகிகள். அவர்கள் இந்தியாவில் சாப்பிட்டு கொண்டு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை புகழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதானி இன்னமும் பன்றிதேஷ்க்கு மின்விநியோகம் செய்கிறார் ......
ஐபில் போட்டியில் வங்கதேச வீரர் பெயரை சேர்த்தது யார்?
இந்தியாவுக்கு ஐபிஎல் செய்தது மகா துரோகம்?
Godda Ultra Super Critical Thermal Power Plant என்பது இந்தியா Jharkhand-இல் இருக்கும் 1,600 MW திறன் கொண்ட காயிலை பாவிக்கும் மின் ஆலை.
பங்களாதேஷ் இது உருவாக்கும் மின் அனைத்தையும் வாங்க 25 வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
இதனால் ஆதானி குழுமம் பங்களாதேஷுக்கு மின் சப்ளை செய்வதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது
இந்திய மக்களின் மன உணர்வுகளை திரு. ஷாருக் கான் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கு பாக்கிஸ்தான் நாட்டு ஆட்சியாளர்கள் லட்சக்கணக்கான வங்கதேச மாணவர்களையும், பொதுமக்களையும் கொன்று குவித்தபோது காப்பாற்றியது இந்தியா. சுதந்திர வங்க தேசத்தை உயிர்தியாகம் செய்து உருவாக்கி தந்த இந்திய ராணுவத்தையும்
இந்தியர்களையும் சுத்தமாக மறந்து வங்க தேசத்து மக்கள் நன்றி மறந்த பேய்களாக மாறிவிட்டனர். ஒவ்வொரு நொடியும் மதம்பிடித்த பிசாசுகளாக மாறி இந்தியர்களை வேட்டையாடுகின்றனர்.
அவர்களுக்கு பண உதவி செய்வது ஷாருக் கானின் மத உணர்வா? இந்த ஷாருக் கான் தான் பாஜக வும் மோடியும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று கூறியவர். 10 வருடங்களுக்கு மேலாக அதை செய்யாமல் படங்களில் நடித்து ஆயிரம் கோடிகளில் புரளும். ""டான்"" ஆக உள்ளார்.
இதுமட்டுமில்ல , பங்களா தேஷுடன் கிரிக்கெட் மேட்ச் அதுவும் இந்தியாவில் விளையாடவே கூடாது. ஒன்லி ICC மேட்ச் மட்டும் அதுவும் இந்தியாவில் இல்லாமல் வேறு இடங்களில் விளையாட வேண்டும்
அவன் ஏலத்தில் எடுத்தால் என்ன? ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இந்தியாவுக்குள் நுழையமுடியாதபடி இந்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்திய அரசு கட்டளையிட வேண்டும். அதற்குமுன்பு இந்த ஷாருக்கானை இந்தியாவை விட்டு துரத்தவேண்டும். தேசதுரோகி...
இங்க பிச்சை எடுத்து விட்டு புத்தியை தேச துரோகி காட்டி விட்டார்!
இவரே பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்..
இந்த சூழ்நிலையில் வங்கதேசத்தவரை எடுத்தது தவறு .. மக்கள் கர் அணியை புறக்கணித்து பாடம் புகட்டவேண்டும்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்ட பிறகு தமிழகமே கொதி நிலையில் இருந்தது. அதன் பின் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு ஐ.பி.எல் சீசனில் இலங்கை வீரர்கள் யாரும் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னையில் விளையாடக் கூடாது என ஆணையிட்டவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதனால் ஐ.பி.எல் அணிகள் இலங்கை வீரர்கள் இல்லாமல் தன்னுடைய பிளேயிங் லெவன் வீரர்களை மாற்றி அமைத்து சென்னையில் விளையாடும் சூழல் உருவானது. தமிழ் வீரரான முத்தையா முரளிதரனும் அந்த நடவடிக்கைக்கு தப்பவில்லை. இப்பவெல்லாம் அது மாதிரியான நடவடிக்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது.அந்த துணிச்சல் தைரியம் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் வராது. பங்களாதேஷில் இந்துக்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். ஷாருக்கான் நிச்சயம் அந்த வீரரை ஏலத்தில் எடுத்திருக்கக் கூடாது. இதில் முதல் தவறு பங்களா தேஷ் வீரர்களை ஏலத்தில் அனுமதித்த ஐ.சி.சி. மீதுதான் உள்ளது.
அது மட்டுமா? மோடி அரசு உறக்கம், இங்க விடியல் அரசு ஹிந்துக்கள் என்றால் ஏளனம் செய்ய்யுது, அது பெண் சிங்கம். அவங்க இருந்தால் கண்டவன் எல்லாம் ஹிண்டுவை திட்ட மாட்டான், போதித்து இருந்து இருப்பானுங்க
இதில் முதல் தவறு பங்களாதேஷ் வீரர்களை ஏலத்தில் அனுமதித்த B.C.C.I மீது உள்ளது.மேலும்
-
பொங்கல் பரிசு ரொக்கம் ரூ.8000 ஆக உயர்த்திடுக: பா.ஜ.,
-
டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
-
வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்: கியூபாவை சேர்ந்த 32 பேர் பலி
-
துபாயில் கார் விபத்து; கேரளாவைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி